வளைகுடா

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

(UTV|TURKEY)-துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான பெராத் அல் பெராக் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி அர்துகானின் அமைச்சரவையில் மின்சக்தி அமைச்சராக செயற்பட்டவர்.

அர்துகானின் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை கடந்த 9 ஆம் திகதி அமைக்கப்பட்டது.

நிருவாகத்துறையின் தலைவரான ஜனாதிபதி அர்துகான் அமைச்சரவையில் நிதி அமைச்சுப் பொறுப்பை தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வழங்கியதனால் நாட்டில் ஊழல் மோசடி இடம்பெறுவதற்கு வழியமைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை துருக்கியின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளாத மேற்குலக ஊடகங்கள் எதிர்மறையான கருத்தைப் பரப்ப முயற்சிக்கின்றது என்பது தெளிவான ஒன்றாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்