உள்நாடு

துமிந்த சில்வா வைத்தியசாலையில்..

(UTV | கொழும்பு) – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக உள்ள துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வார்டு 18ல் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று (31) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளதுடன், இவ்வாறானதொரு பின்னணியிலேயே துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுத்துள்ள குறிப்பு கீழே,

Related posts

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை – வஜிர அபேவர்தன

editor

கணக்காய்வு அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துங்கள் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை.