அரசியல்உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர்,

“மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது.

ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

Related posts

Aeroflot விமான விவகாரம் : இலங்கை தூதுவருக்கு ரஷ்ய அரசு எதிர்ப்பு

ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் இராஜினாமா