உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தந்தையும் 6 வயது மகளும் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 39 வயதுடைய தந்தையும், 6 வயதுடைய மகளுமே உயிரிழந்ததாகவும், இவர்கள் இருவரும் கல்பொத்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக T56 ரக துப்பாக்கி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்