உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மொரட்டுவ, லுனாவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டியினை பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் பதற்ற நிலை நிலவ, தற்போது அதிரடிப் படையினர் உதவியுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

‘திவாலாகிவிட்ட அரசாங்கத்தால் செய்யக்கூடியது வரம்புக்குட்பட்டது என்பதை உணருங்கள்’

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை