வகைப்படுத்தப்படாத

துனிசியா நாட்டில் அவசரநிலைச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – துனிசியா நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அந்நாட்டு ஜனாதிபதி பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று6)( உத்தரவிட்டுள்ளார்.

துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பொலிசார் அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.

கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு 03 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிபரின் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்

Momoa leads Netflix’s “Sweet Girl” film

Spider-Man: Far From Home චිත්‍රපටය ඇ.ඩො මිලියන 600ක් උපයයි.