உள்நாடுபிராந்தியம்

துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (18) செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக இன்றைய தினம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் துணை வைத்திய நிபுணர்கள் காலை 07 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளிகள் மருந்தகத்தில் குளிசைகளைப் பெற்று கொள்ள முடியவில்லை. அத்தோடு எக்ஸ் ரே எடுத்தல் போன்றவையும் இடம்பெறவில்லை.

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!