வகைப்படுத்தப்படாத

தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தின் அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக முடிவெடுக்கும் தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம் இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடந்த முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக முடிவெடுப்பதற்காக குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Samuel L. Jackson joins the new “Saw”

மஹிந்த அமரவீர சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு

No evidence to claim IS linked to Easter Sunday attacks – CID