உள்நாடு

தீயினால் முற்றாக எரிந்த வீடு – உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

களுத்துறை, வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைபகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

ஹட்டன் மறு அறிவித்தல் வரையில் முடக்கம்