சூடான செய்திகள் 1

தீப்பிடித்து எரிந்த விற்பனை நிலையங்கள்

(UTV|COLOMBO)-பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் திடீரென தீப்பரவியுள்ளது.

நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலினால் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை விற்பனை நிலையமும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீயினால் உயிராபத்து எதுவும் ஏற்படாத நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

 

 

 

Related posts

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான மனு நிராகரிப்பு