உள்நாடு

தீப்பந்தம் ஏந்தியவாறு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து , தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக அழைக்கவும், மாணவர்களை துன்புறுத்தாதே, மாணவர்கள் மீதான அடக்கமுறையை நிறுத்து, போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது