உள்நாடு

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது ஆண் நண்பர் இசுறு பண்டார ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி மற்றும் அவரது ஆண் நண்பர் இசுறு பண்டார ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவானின் உத்தரவில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சந்தேநபர்கள் இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

கொழும்பினை விஞ்சும் களுத்துறை

ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்கிறார் – பாதுகாப்புச் செயலாளர்!