உள்நாடு

திருமலை துறைமுகத்தில் இருந்து ‘சக்தி’ புறப்பட்டது

(UTV | கொழும்பு) –  இந்தியாவிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள கடற்படையின் ‘சக்தி’ கப்பல் தனது பயணத்தினை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை சென்றுள்ளது.

டெல்டா வைரஸ் பரவலை அடுத்து நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கான ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ள நிலையிலும், அடுத்த வாரங்கள் மிக மோசமான வைரஸ் தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்ற நிலையிலும் இந்தியாவில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும் முன்னாயத்த நோக்கத்தில் இலங்கை கடற்படையின் ‘சக்தி’ கப்பல் இலங்கையில் இருந்து சென்னை நோக்கி பயணமாகியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“.. பாதுகாப்பு அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, எமது கடற்படை கப்பலான ‘சக்தி’ கப்பலை இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்தை சென்றடைய சுமார் ஒன்றரை நாட்கள் தேவைப்படும், அதன் பின்னர் அவர்களின் ஒட்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் இங்கு வர ஒரு வாரகாலமாகும்.

இந்த வார இறுதியில் மீண்டும் இலங்கைக்கு எமது கப்பல் வரும்..” எனவும் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார்.

Related posts

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

ஜனாதிபதி, சீனாவிற்கு விஜயம்!