உள்நாடு

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.

(UTV | கொழும்பு) –

அநுராதபுரம் புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 புகையிரத ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புகையிரத நிலையத்தில் 545 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே. டபிள்யூ பண்டார குறிப்பிட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி இந்த டீசல் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளரால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழு சமர்ப்பித்த அறிக்கையை கருத்திற் கொண்டு அநுராதபுரம் புகையிரத நிலையத்தின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி உட்பட 5 புகையிரத ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீசல் திருட்டு தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதாகவும், அநுராதபுரம் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவு

இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு