வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் கரை வலையில் 12 டொல்பின்கள் சிக்கின

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 12 டொல்பின் மீன்கள் சிக்கி இறந்துள்ளன.

அதையடுத்து திருகோணமலை விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கரைவலையை இழுத்த மீனவர்கள் 9 பேரை கைது செய்ததுடன் 12 டொல்பின்களையும் கைப்பற்றி திருகோணமலை துறைமுகபொலிஸாரிடம் கையளித்தனர்.

குறித்த மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Tourism earnings drop by 71% in May

ඇවන්ගාඩ් හිටපු සභාපති රිමාන්ඩ් භාරයට

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !