உள்நாடு

திரிபோஷாவை வீட்டிற்கு சென்று வழங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக,சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத நிறையின் அடிப்படையில் குறித்த திரிபோஷாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான விட்டமின் வகைகளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி மீது நம்பிக்கை இழக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி?

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.

யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு