உள்நாடு

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்

தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தியவன்னா ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகில் இன்று (20) காலை நபரொருவர் இந்த சடலத்தை கண்டுள்ளார்.

பின்னர் இது குறித்து தலங்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 அல்லது 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மற்றும் மிரிஹான சொகோ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு

ஆளும் தரப்பினருக்கும் எந்த சலுகையும் இல்லை – ஜனாதிபதி அநுர

editor