உள்நாடு

தினேஷ் குணவர்தன ஐ.நா வில் இன்று  உரை

(UTV|கொழும்பு) – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (26) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளில் இருந்து விலகுவது குறித்து வெளிவிவகார அமைச்சர் தமது உரையின் ஊடாக அறிவிக்கவுள்ளார்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆற்றவுள்ள உரைக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

காஸாவிற்கான சிறுவர் நிதியத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு