கிசு கிசு

சில திட்டங்களை கையாண்டு போட்டியில் வெற்றி பெறுவோம் – திமுத்

(UTVNEWS|COLOMBO) – நியூசிலாந்து அணியினர் சிறந்த முறையில் விளையாடுவார்கள். அதேபோல, நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் வைத்துள்ள ஒருசில திட்டங்களை கையாண்டு முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

நேற்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்து அணியை எவ்வாறு எதிர்கொள்ளத் தயார் என்பது குறித்து இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன,கருத்து வெளியிடுகையில்,

“நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு நாங்களும் ஒருசில திட்டங்களை வைத்துள்ளோம். பெரும்பாலும் விக்கெட் காப்பாளராக நிரோஷன் திக்வெல்ல விளையாடுவார். தினேஷ் சந்திமாலும், குசல் ஜனித் பெரேராவும் மேலதிக விக்கெட் காப்பாளர்களாக அணியில் உள்ளனர். எனினும், இறுதி பதினொருவர் அணியில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டி ஏற்பாட்டால் அதை செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

ஆடுகளங்களில் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை தற்போது நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அதற்கு ஒருசில திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். அதேபோல நியூசிலாந்து அணியும் எமக்கு எதிராக சிறந்த முறையில் விளையாடுவார்கள் என நம்புகிறோம்.

எனினும், அதற்கு பதிலளிக்க நாங்களும் தயாராக உள்ளோம். எனவே அந்த திட்டங்களை கையாண்டு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

Related posts

பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க பிரத்யேகமான காலணி

நாய்கள், குதிரைகளுக்கு பென்சன்

தொற்றாளர்கள் 800 – 10,000 வரையில் அதிகரிக்கும் சாத்தியம்