உள்நாடு

 திடீர் சிறைச்சாலை சோதனையில் தொலைபேசிகள் பறிமுதல்

(UTV | கொழும்பு) –  திடீர் சிறைச்சாலை சோதனையில் தொலைபேசிகள் பறிமுதல்

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 7 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைகளிலேயே இவ்வாறு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுடுகிறது

இதன்படி, குறித்த கையடக்கத் தொலைபேசி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பல சந்தேக நபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்