அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

திடீரென முறிவடைந்த பேச்சுவார்த்தை – உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இரு கட்சிகளும் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் திடீரென முறிவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான தெளிவான திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலந்துரையாடல்களில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் தமது கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடும் என்றும் உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சமீபத்தில் அறிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல்கள் தனது கட்சியின் தற்போதைய தலைமையை மாற்றுவதற்கான முயற்சியைக் குறிக்கின்றன என்று அவர் கூறினார்.

Related posts

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

editor

வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை