வகைப்படுத்தப்படாத

திடீரென பாதையில் ஓடிய குழந்தைக்கு மேலாக இரண்டு கெப் வண்டிகள் சென்ற பயங்கர சம்பவம் – காணொளி

(UDHAYAM, COLOMBO) – சிறிய குழந்தைகளுடன் பாதையில் பயணிக்கும் பெரியோர்களின் கவனக் குறைவால் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் தொடர்பான பல செய்திகள் வெளிவந்துள்ளன.

இதே போன்று இடம்பெறவிருந்த கோர, விபத்து சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் சீனாவிலேயே இடம்பெற்றுள்ளது.

இரண்டு வயதான குழந்தையொன்று பாதை ஊடாக திடீரென ஓடியுள்ள நிலையில், பாதையில் பயணித்த 2 கெப் வண்டிகள் அந்த குழந்தைக்கு மேலாக சென்றுள்ளன.

எனினும் அதிர்ஷ்டவசமாக குழந்தை அசைவில்லாமல் இருந்ததன் காரணமாக குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் குழந்தையின் பாட்டி அவரை தூக்கிச் சென்றுள்ளார்.

அந்த காணொளி கீழே..

[ot-video][/ot-video]

Related posts

மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் விவாதம்

இடியுடன் கூடிய மழை

Panadura North OIC interdicted over missing T-56 riflesP