உள்நாடு

திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான்

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, திலின கமகே மொரட்டுவை மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பிலான வழக்கை விசாரிப்பதற்கு மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே நேற்றைய தினம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

தொடரும் நில அதிர்வுகள்; கம்பளை பிரதேசத்தில் நில அதிர்வு

20 ஆவது திருத்தம் – நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு [UPDATE]

தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் பிரதமர் ஹரினி தலைமையில் இடம்பெற்றது

editor