விளையாட்டு

திசர தலைமையிலான தம்புள்ளை அணிக்கு வெற்றி

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா கிரிக்கட் இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் நேற்று(22) இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் தம்புள்ளை அணியானது 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய அஷான் பிரியஞ்சன் 41 பந்துகளில் 57 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 17.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அவ்வணி சார்பாக திமுத் கருணாரத்ன அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனுஷ்க குணதிலக 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். வனிது ஹசரங்க 3.5 ஓவர்கள் பந்து வீசி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

புதிய தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்ஹக்

செரீனாவுக்கு அதிர்ச்சி தோல்வி

சேர் கார்பில்ட் சோபர்ஸ் விருது – 2019