உள்நாடு

‘தாய்மை’ மதிக்கப்பட வேண்டும் – ஹிருணிகாவின் புகைப்படங்களை பகிர வேண்டாம்

(UTV | கொழும்பு) – மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர நேற்றைய தினம் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அரசியல் விடயமாக தனது இல்லத்திற்கு வந்திருப்பதாகவும், அது தொடர்பான சித்தாந்தத்தின் மூலம் அதைக் கையாள வேண்டும் என்றும் கூறினார். அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை.

மேல் மாகாணத்தில் விசேட சோதனை