உள்நாடு

தாய்ப்பால் புரைக்கேறியதில் 28 நாட்களேயான சிசு உயிரிழந்துள்ளது!

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்ற போது சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

 

Related posts

100 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

editor

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை