உள்நாடு

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை இன்று

மீண்டும் வேதன வருவாய் மீதான கட்டண வரி

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை