உள்நாடு

தாமரைக் கோபுரத்திற்கு சேதம்விளைவித்த நபர்கள் கைது!

(UTV | கொழும்பு) –

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சில பெண்களும் ஆண் ஒருவரும் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.வீடியோ காட்சிகளின்படி, இவர்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவது அவதானிக்கப்பட்ட நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மருதானை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், அண்மைக்காலமாக சேதம் ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு