உள்நாடு

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்

(UTV | கொழும்பு) – தாமரை கோபுரத்தை பார்வையிட பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களுக்கு தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு உள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிடலாம்.

இதனிடையே, இதனை பார்வையிட ரூ.2000 டிக்கெட் விலை வழங்கப்படாது என்றும், டிக்கெட்டின் விலை ரூ.500 ஆக மாற்றப்பட்டுள்ளது.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான டிக்கெட்டின் விலை ரூ. 200, அதே சமயம் வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு US$20 வசூலிக்கப்படுகிறது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் பற்றிய விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

ஜனாதிபதி நியமனம் வர்த்தமானியில் வெளியீடு