உள்நாடு

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை [UPDATE]

(UTV | கொழும்பு) – காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக செயற்பட்ட தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றத்துடன் இவர் தொடர்புபட்டிருந்த நிலையில், கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

27.07.2022 அன்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி என்ற சந்தேகநபர், புதிய மெகசின் சிறைச்சாலையின் காவலில் இருந்தபோது, ​​சிறைச்சாலை விதிகளின்படி சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட பொருளான கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.

Related posts

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

editor

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

மின் கட்டணத்தை செலுத்த தவறும் நுகர்வோருக்கு கால அவகாசம்