உள்நாடு

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு

(UTV | கொழும்பு) –  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை விடுவித்துள்ளது.

தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் சகல கடமைகளிலும் இருந்து விலக நேரிடும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய விசேட விடுமுறை, கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பு, 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு, விடுமுறை தின கொடுப்பனவு ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related posts

ரயில் சேவைகள் நிறுத்தம்

சீனாவின் ‘சினோபார்ம்’ புதனன்று வரும்

நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

editor