வகைப்படுத்தப்படாத

தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சிரிய அரச படை

(UTV|SYRIA)-சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரிய அரச எதிர்ப்பு போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை அந்த நாட்டின் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக குறித்த பிரதேசத்தில் இருந்து அரச எதிர்ப்பு போராளிகள் வெளியேறுவதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் குறித்த பகுதியின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது என்று போராளிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிரிய அரச படையினர் அங்கு கடும் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல்களில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக, போராளிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது படைத்தரப்பை பலப்படுத்தும் நோக்கில், சிரிய அரசாங்கம் மேலதிக படையினரை கிழக்கு கோட்டா நோக்கி அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இந்த பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை, பாரவூர்திகளில் இருந்து இறக்குவதற்கு வழியில்லாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ம் ஆண்டு நினைவுநாள்

ஜப்பானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு…