கிசு கிசு

தலையாட்டி பொம்மைகளாக இருந்தது போதும் – தலைமை கோரும் ஹகீம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காக தலைமைக் குழு ஒன்றினை நியமிக்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனது தலைவர் ரவுப் ஹகீம் இனால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இதனை உறுதி செய்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிகள் பல சேர்ந்து கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைமை இருந்து அவர் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளாக இருப்பதை விட்டும், அனைவரும் சமனாக செயற்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சார கட்டணம் பாரியளவில் உயரும் சாத்தியம்

உடலை வெட்டிப் பார்க்கும் மெத்திகா பித்திக்கா புத்திகா சன்ன பெரேரா எப்படி வைராலஜிஸ்ட் ஆக முடியும்? [VIDEO]

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அமைச்சருமான அர்ஜுன மீது பாலியல் குற்றச்சாட்டு…