அரசியல்உள்நாடு

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவிகளில் மாற்றம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகாத்தை பெறும் வகையில் கட்சியை மறுசீரமைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் கொட்டகலையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு அறிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதமளவில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையோர்களை பதவிக்கு அமர்த்தி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை மீள பலப்படுத்தவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

“இந்திய பிரதமருக்கு எனது நன்றிகள்” – மஹிந்த

“எங்களுக்கு இலங்கை வேண்டாம்” தற்கொலைக்கு முயலும் வியட்நாமிலுள்ள இலங்கையர்கள்

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்