உள்நாடு

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை (INTERPOL) விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

நீர்கொழும்பில் கொலை – ஒருவர் கைது

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை