வகைப்படுத்தப்படாத

தலவாக்கலையில் பேரீச்சம்பழ அறுவடை

(UDHAYAM, COLOMBO) – தலவாக்கலை பொலிஸ் நிலைய பகுதியில் பேரீச்சம்பழ அறுவடை இடம்பெற்றுள்ளது.

1948ம் ஆண்டு பொலிஸ்நிலையம் திறக்கப்பட்டபோது இந்த பேரீச்சம்பழ மரக்கன்று நடப்பட்டது. பல வருடங்களிற்கு பின்னர் குளிர்கால பிரதேசத்தில் இவ்வாறான பேரீச்சம்பழ அறுவடை இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த மரத்தில் பேரீச்சம்பழம் காய்த்தபோதிலும் உரிய அறுவடைக்கு முன்னரே கீழே விழுந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது இந்த மரத்தில் 5 கொத்துக்களாக பேரீச்சம்பழம் காய்த்துள்ளது. இவற்றில் 2 கொத்துக்களளை வெட்டிக்காய வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 அடி உயரமான இந்த பேரீச்சம்பழ மரத்திற்கு 69 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை பார்வையிடுவதற்கு நாளாந்தம் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் வருகை தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

Boris Johnson to be UK’s next prime minister

ඉන්දීය ක්ෂණික දික්කසාද ක්‍රමය තහනම් කෙරේ

Met. forecasts light showers in several areas