சூடான செய்திகள் 1

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

(UTV|COLOMBO)-கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது.

இதனால் இன்று காலை 8.00 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இடம் பெற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பிரதான வீதீயினூடாக சிறிய வாகனங்கள் மாத்திரமே ஒருவழியாக பயணித்தன.

குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளில் தலவாக்கலை காவல்துறையினர் ஈடுப்பட்டதுடன், பல மணித்தியாலங்களுக்கு பின் அட்டன் – நுவரெலியா ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி