உள்நாடு

தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது

(UTV| கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து முதலில் நாடு விடுதலை அடையட்டும் என கூறிய அவர், அதன் பின்னர் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதுவரை அரசாங்கம் பொறுமையோடு இருக்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்

தங்கத்தின் விலை- இன்றைய நிலவரம்

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.