அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

“எனக்கு பெரிய ஜப்பானிய பைக் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பு இருந்தது… 1.4 மில்லியனுக்கு ஒரு விட்ஸை வாங்க முடியும் என்று யாரோ சொன்னார்கள்… நான் பார்த்தோன் Toyota raize இன் விலை 122 இலட்சம்… யாரிஸ் 185 இலட்சம், ப்ரீயஸ் 289 இலட்சம்… இங்கே ஒரு பெரிய சிக்கல் நிலைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பின் பெரும்பகுதி மோட்டார் வாகனங்களின் இறக்குமதியால் ஏற்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (17) தெரிவித்தார்.

அது எப்படி என்று நான் தேடிப் பார்த்தேன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரிகள் சுமார் 1.6% வீதத்தால் அதிகரிக்க வேண்டும்.

அதில் பாதி வாகன இறக்குமதியிலிருந்து வருகிறது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.

ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.”

Related posts

தேசபந்து தென்னகோனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!