உள்நாடு

தற்போதைய ஜனாதிபதியின் அரசின் கீழ் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை

(UTV | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கத்தின் கீழ் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று(3) மாலை தனக்கும் உதய கம்மன்பிலவுக்கும் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்ட பின்னர், இன்று(4) கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய வீரவன்ச இவ்வாறு கூறினார்.

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் வியாழக்கிழமை (3) மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரை அவர்களின் அமைச்சுக்களில் இருந்து நீக்கியதாக PMD அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

editor