உள்நாடு

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –     தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேரை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துறைக்கு ஒரு குழுவைக் கொண்டுவரவேண்டும் எனவும் . அதன் பின்னர், இந்தத் தேர்வு இறுதியாக நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்து, 19 பீடங்களை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்

இதன் மூலம் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிக்குப் பின்னர் ஒரு தரமான ஆசிரியர் வகுப்புக்கு அனுப்பப்படுவாரென குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்வதற்கான பொதுப் பரீட்சை டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்டு 26,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பொதுப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகள் மூலம் உரிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்” என்றும் எதிர்பார்ப்பதாகவும்   இதன் போது  சுட்டிக்காட்டினார்.

 

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க காலமானார்

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு