உள்நாடு

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

(UTV | கொழும்பு) – தற்போதைய நிர்வாகத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகள் வழங்கும் தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களை வாயடைக்க முடியாது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, முழு அரசாங்கமும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய தொழில் வல்லுநர் ஒருவர் ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வெறும் தற்காலிக தீர்வுகளால் போராட்டக்காரர்கள் திருப்தியடைய மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

குடிமக்கள் முழு அரசாங்கத்தையும் ராஜினாமா செய்ய அழைப்பு விடுக்கின்றனர், அதே நேரத்தில் அவர்கள் அரச கருவூலத்தில் இருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றக் கோருகின்றனர்.

ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்கள் மூலம் நாட்டை மூடுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தற்போதைய நிதி பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

இல்லை என்றால் அடுத்த சில நாட்களில் போராட்டம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக இராஜினாமா செய்யத் தவறினால், குடிமக்கள் பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

editor

நாடு முழுவதும் மழையுடனான வானிலை