வகைப்படுத்தப்படாத

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான யு.பி – 103 விமானம்

மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி – 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.

குறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார்.

இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 

 

 

Related posts

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு

DMC says drought in 17 districts