உள்நாடு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று

(UTV | கொழும்பு) – சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய இன்று(11) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன், இம்முறை 331,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்