கேளிக்கை

தம்பி படத்தில் பிரபுதேவா

(UTV |  சென்னை) – தனது இளைய சகோதரர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் திகதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கன்னட ரீமேக்கை நடிகர் பிரபுதேவாவின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத் இயக்கி வருகிறார். இது அவர் இயக்கும் முதல் படம் ஆகும். இப்படத்தில் புனித் ராஜ்குமார், கிருஷ்ணா, சங்கீதா ஸ்ரீங்கேரி, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து பிரபுதேவா நடனமாட உள்ளார். இப்பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார். இப்பாடல் படிப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஜானி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

புனித் ராஜ்குமார் சார் மற்றும் பன்முகக் கலைஞர் பிரபுதேவா சாருக்காக நடன இயக்கம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அதை சுந்தரம் மாஸ்டர் முன்னிலையில் அவரது மகன் நாகேந்திர பிரசாத் இயக்கும் முதல் படத்தில் செய்வதை அசிர்வாதமாக கருதுகிறேன்.

இவ்வாறு ஜானி மாஸ்டர் கூறியுள்ளார்.

Related posts

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

பாவனா துணிந்து செய்த செயல்!!

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்