அரசியல்உள்நாடு

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று (26) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு