அரசியல்உள்நாடு

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக பொதுஜன பெரமுனவின தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம். எனினும் தேர்தலுக்காக தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள் தற்போது களத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், இதுவும் இந்தக்கட்சிகளின் இரட்டை வேடத்திற்குச் சான்றாகும் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“ஒரு நாட்டின் பாதுகாப்பு பாதுகாப்பாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் இருக்க வேண்டும்”

‘மக்களின் அழுத்தம் அரசாங்கத்திற்கு பயங்கரவாதமாக மாறியுள்ளது’

‘ரிஷாதின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’ என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு