உள்நாடு

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து

ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அழைப்பு