உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

(UTV | கொழும்பு) –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சாடியுள்ளார். அத்துடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு எப்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் அதிகார பகிர்விற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கினால் பொலிஸ் சேவை கேலிக்கூத்தாக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

நாளை 600 கைதிகள் விடுதலை!