உலகம்

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை

(UTV |  சவுதி அரேபியா) – சுன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று என்றும் அரசு கூறி உள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடைபெறும் போது, தப்லீக் ஜமாஅத் பற்றி மக்களை எச்சரிக்கும் வகையிலான பிரசங்கத்திற்கு நேரம் ஒதுக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

‘இந்தக் குழுவின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி பிரகடனம் செய்ய வேண்டும். அவர்கள் வேறுவிதமாகக் கூறினாலும், அது பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாகும். அவர்களின் மிக முக்கியமான தவறுகளைக் குறிப்பிடவும். சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைக் குறிப்பிடுங்கள். தப்லீக் மற்றும் தாவா குழு உட்பட பாகுபாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாத் அமைப்பு 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் 350 முதல் 400 மில்லியன் உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பினர் தங்கள் கவனம் முழுக்க மதத்தின் மீது மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய தொழிலாளர் விதிகள்

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்